டெல்லியில் விடிய விடியப் பெய்த மழையால் வாகன ஓட்டிகள் அவதி

0 2996

லைநகர் டெல்லி மற்றும் பஞ்சாப், அரியானா உள்ளிட்ட மாநிலங்களில் பலத்த மழை பெய்து வருகிறது. விடிய விடியப் பெய்த மழையால் டெல்லியில் பல இடங்களில் தண்ணீர் தேங்கியுள்ளது.

டெல்லியில் கடந்த வாரம் வரை கடும் வெப்பம் நிலவி வந்த நிலையில், இரண்டு நாட்களாக விட்டுவிட்டு லேசான மழை பெய்தது. இந்நிலையில், நள்ளிரவில் டெல்லி மற்றும் புறநகர்ப் பகுதிகளில் கனமழை பெய்தது.

டெல்லியில் பெய்த மழையால் பல இடங்களில் அதிகாலை முதல் மழை நீர் தேங்கியுள்ளது. பகதூர்கர், குருகிராம், மனேசர், ஃபரிதாபாத், பல்லாப்கர், நொய்டா உள்ளிட்ட புறநகர்ப் பகுதிகளிலும் விடிய விடிய கனமழை கொட்டித் தீர்த்தது.

கொஹானா, கன்னுர், சோனிபட் உள்ளிட்ட பகுதிகளில் பெய்த கனமழையால் சாலைகளில் வெள்ளம் போல தண்ணீல் தேங்கி நின்றது.

உத்தரகாண்ட் மாநிலத்தின் உத்தரகாசி மாவட்டத்தில் மழை பெய்து வரும் நிலையில், மண்டோ என்ற கிராமத்தில் வீடு இடிந்து விழுந்ததில் 3 பேர் உயிரிழந்தனர்.

பஞ்சாப், ஹரியானா, உத்தரப்பிரதேசம், ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களிலும் பரவலாக பலத்த மழை பெய்துள்ளது. மூன்று நாட்களுக்கு கனமழை நீடிக்கும் என இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments