இந்திய கடற்படைக்குச் சொந்தமான நீர்மூழ்கிக் கப்பல் தூத்துக்குடி வருகை

0 1817
இந்திய கடற்படைக்குச் சொந்தமான நீர்மூழ்கிக் கப்பல் தூத்துக்குடி துறைமுகத்தில் நிறுத்தப்பட்டுள்ளது.

இந்திய கடற்படைக்குச் சொந்தமான நீர்மூழ்கிக் கப்பல் தூத்துக்குடி துறைமுகத்தில் நிறுத்தப்பட்டுள்ளது.

அதிநவீன நீர்மூழ்கி கப்பலான சிந்து ஷாஸ்ட்ரா தூத்துக்குடி துறைமுகத்தில் உள்ள ஐ.என்.எஸ். கட்டபொம்மன் கடற்படைக்கான கப்பல் தளத்தில் நிலை நிறுத்தப்பட்டுள்ளது.

கப்பலில் ஏற்பட்டுள்ள தொழில்நுட்பக் கோளாறை சரிசெய்யவும், பெட்ரோல், டீசல் மற்றும் அடிப்படை தேவையான தண்ணீர் நிரப்புவதற்காகவும் நீர்மூழ்கி கப்பல் தூத்துக்குடி கப்பல்தளத்திற்கு வந்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

மேலும், நடுக்கடலில் போர் ஒத்திகைக்காகவும் இந்த நீர்மூழ்கி கப்பல் வந்து இருக்கலாம் எனக் கூறப்படுகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments