கிணற்றுக்குள் சிக்கித் தவித்த 15 நல்லபாம்புக் குட்டிகள் மீட்பு

0 2629
ஒடிசாவில் தண்ணீர் நிறைந்த கிணற்றில் தவித்த 15 நல்லபாம்புக் குட்டிகள் பத்திரமாக மீட்கப்பட்டன.

ஒடிசாவில் தண்ணீர் நிறைந்த கிணற்றில் தவித்த 15 நல்லபாம்புக் குட்டிகள் பத்திரமாக மீட்கப்பட்டன.

கஞ்சாம் மாவட்டத்தில் உள்ள பிரமாபூர் என்ற இடத்தில் கிணறு ஒன்றில் ஏராளமான குட்டிப் பாம்புகள் இருப்பதாக பாம்பு பிடிப்பவர்களுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து சிறிய கூடை மூலம் அந்தப் பாம்புகள் மீட்கப்பட்டன.

இறுதியில் கூடைக்குள் இருந்தவை அனைத்தும் நல்ல பாம்பு குட்டிகள் என்பது தெரியவந்தது. இதையடுத்து அந்தப் பாம்புக் குட்டிகள் வனப்பகுதியில் பத்திரமாக விடுவிக்கப்பட்டன.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments