ரஷ்யாவில் 8 லட்சம் ஹெக்டேர் பரப்பளவில் பற்றி எரியும் காட்டுத் தீ

0 1787
ரஷ்யாவின் வனப்பகுதியில் 8 லட்சம் ஹெக்டேர் பரப்பளவில் பற்றி எரியும் காட்டுத் தீயை அணைக்க அந்நாட்டு தீயணைப்பு வீரர்கள் போராடி வருகின்றனர்.

ரஷ்யாவின் வனப்பகுதியில் 8 லட்சம் ஹெக்டேர் பரப்பளவில் பற்றி எரியும் காட்டுத் தீயை அணைக்க அந்நாட்டு தீயணைப்பு வீரர்கள் போராடி வருகின்றனர்.

சைபீரிய வனப்பகுதியில் கடந்த சில வாரங்களாக காட்டுத் தீ பற்றி எரிந்து வருகிறது. நேற்று ஒரே நாளில் 4 ஆயிரத்து 500 ஹெக்டேர் பரப்பளவில் 22 புதிய இடங்களில் நெருப்பு பற்றி எரிகிறது. இதனால் ஏற்பட்டுள்ள புகை மண்டலம் அப்பகுதி முழுவதும் சூழ்ந்துள்ளது.

வனப்பகுதியை ஒட்டியுள்ள கோர்னி என்ற பகுதியை புகை சூழ்ந்துள்ளதால் அங்கு வாழும் மக்கள் பெரும் பாதிப்புக்கு ஆளாகியுள்ளனர்.

தொடர்ந்து எரியும் நெருப்பை அணைக்கும் பணியில் தீயணைப்பு வீரர்களுடன், ராணுவத்தினரும் களமிறக்கப்பட்டுள்ளனர். நெருப்பு தொடர்ந்து எரிவதால் மக்கள் வீடுகளுக்குள்ளேயே இருக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments