ஆப்கானிஸ்தானில் இந்திய சொத்துக்களைக் குறிவைக்கும் பாகிஸ்தான் தீவிரவாதிகள்

0 2940

ஆப்கானிஸ்தானில் உள்நாட்டு யுத்தம் தீவிரம் அடைந்துள்ள நிலையில் அங்குள்ள இந்தியாவின் சொத்துகள், கட்டடங்கள் மீது தாக்குதல் நடத்த தாலிபன்களும் பாகிஸ்தான் தீவிரவாதிகளும் திட்டமிட்டிருப்பதாக உளவுத்துறையினர் எச்சரித்துள்ளனர்.

ஆப்கானில் ராணுவத்துக்கு எதிராகப் போரிடும் தாலிபன்களுக்குத் துணையாக 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாகிஸ்தான் உளவுப்பிரிவினரும் தீவிரவாதிகளும் இணைந்துள்ளதாகக் கூறப்படுகிறது.

கடந்த 20 ஆண்டுகளில் மறுசீரமைப்புப் பணிகளுக்காக ஆப்கானில் இந்தியா சுமார் 3 பில்லியன் டாலர் தொகையை முதலீடு செய்துள்ளது. ஆப்கான் நாடாளுமன்றக் கட்டடம் புதுப்பிப்பு, டேலாராம்-ஜாரங் இடையேயிலான 218 கிலோமீட்டர் சாலை போன்ற பணிகள் இந்தியாவின் துணையுடன் நிறைவேற்றப்பட்டுள்ளன.

ஆப்கான் கல்வி, ஆசிரியர் பயிற்சி போன்றவற்றிலும் இந்தியா மிகப்பெரிய பங்களிப்பை செய்துள்ளது. ஆப்கானில் உள்ள இந்தியர்கள் பாதுகாப்பு கருதி திரும்ப அழைக்கப்பட்டுள்ள நிலையில் இந்தியாவின் பல மில்லியன் டாலர் சொத்துகள் மற்றும் முதலீடுகளுக்கு தாலிபன்-பாகிஸ்தான் படைகள் குறிவைத்திருப்பதாக எச்சரிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments