பாகிஸ்தானின் தீவிரவாத ஆதரவு நிலைப்பாட்டை சர்வதேச அரங்கில் வெளிப்படுத்தியவர் மோடி-அமைச்சர் ஜெய்சங்கர்

0 1739

பாகிஸ்தானின் தீவிரவாத ஆதரவு நிலைப்பாட்டை சுட்டிக் காட்டி சர்வதேச அரங்கில் பிரதமர் மோடி தொடர்ந்து பேசி வந்ததால் தான் பாகிஸ்தானை பாரிஸில் உள்ள சர்வதேச நிதி அதிரடிப்படை அமைப்பான FATF கிரே பட்டியலில் வைத்துள்ளது என்று மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.

பாஜக தலைவர்களுக்கான பயிலரங்கில் காணொலி வாயிலாகப் பேசிய ஜெய்சங்கர், அண்டை நாடுகளுடன் இந்தியா நட்புறவையே நாடுகிறது என்ற போதும் தீவிரவாதத்தை சர்வதேச பிரச்சினையாக எழுப்பி வருவதாகவும் தெரிவித்தார். தீவிரவாதம் என்பதை ஒரு சில நாடுகள் சார்ந்த பிரச்சினையாக பார்க்கக்கூடாது என்றும் அவர் விளக்கினார்.

பிரதமர் மோடி தலைமையிலான பாஜக தலைமையிலான மத்திய அரசின் தொடர் முயற்சிகளால்தான் லஷ்கர் இ தொய்பா, ஜெய் ஷே முகமது போன்ற பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாத இயக்கங்களுக்கு சர்வதேச அளவில் தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும் ஜெய்சங்கர் தெரிவித்தார்.சீனாவுடனான எல்லைப் பிரச்சினை குறித்தும் குறிப்பிட்ட வெளியுறவு அமைச்சர் சீனாவுக்கு இந்தியா தலைவணங்காது என்பதை உலகிற்கு உரக்கத் தெரிவித்து விட்டோம் என்றார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments