பாகிஸ்தானில் உள்ள தூதர் உள்ளிட்ட அதிகாரிகளை திரும்ப அழைத்தது ஆப்கானிஸ்தான்

0 2920
ஆப்கான் தூதர் நஜ்புல்லாவின் மகள் கடத்தப்பட்ட சம்பவத்தையடுத்து பாகிஸ்தானில் இருந்து தமது தூதரை ஆப்கான் அரசு திரும்ப அழைத்துள்ளது.

ஆப்கான் தூதர் நஜ்புல்லாவின் மகள் கடத்தப்பட்ட சம்பவத்தையடுத்து பாகிஸ்தானில் இருந்து தமது தூதரை ஆப்கான் அரசு திரும்ப அழைத்துள்ளது.

இஸ்லாமாபாத் தூதரகத்தில் பணிபுரியும் அதிகாரிகளும் திரும்ப அழைக்கப்பட்டுள்ளனர். தூதரின் மகளான 26 வயது சில்சிலா ஜின்னா சூப்பர் மார்க்கெட்டில் இருந்து திரும்பும் போது அடையாளம் தெரியாத சிலரால் டாக்சியில் கடத்திச் செல்லப்பட்டார்.அவரை கடுமையாக சித்ரவதை செய்த பின்னர் பல மணி நேரம் கழித்து அவரை கடத்தியவர்கள் விடுவித்தனர். உடலில் காயங்கள் மற்றும் அதிர்ச்சியால் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இச்சம்பவம் குறித்து விசாரணை நடைபெற்று வருவதாகவும் விரைவில் குற்றவாளிகள் கைது செய்யப்படுவார்கள் என்றும் பாகிஸ்தான் அரசு தெரிவித்துள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments