காஷ்மீரில் பதுங்கியிருந்த 2 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை..!

0 1851
காஷ்மீரில் மறைவிடத்தில் பதுங்கிய தீவிரவாதிகளுக்கும், பாதுகாப்புப் படையினருக்கும் நடுவே விடிய விடிய நடந்த துப்பாக்கிச் சண்டையில் லஷ்கர் இயக்கத்தின் முக்கியத் தளபதி உள்ளிட்ட இருவர் கொல்லப்பட்டனர்.

காஷ்மீரில் மறைவிடத்தில் பதுங்கிய தீவிரவாதிகளுக்கும், பாதுகாப்புப் படையினருக்கும் நடுவே விடிய விடிய நடந்த துப்பாக்கிச் சண்டையில் லஷ்கர் இயக்கத்தின் முக்கியத் தளபதி உள்ளிட்ட இருவர் கொல்லப்பட்டனர்.

சோபியான் மாவட்டத்தில் உள்ள செக் சாதிக் கான் என்ற இடத்தில் சில தீவிரவாதிகள் பதுங்கியிருப்பதாக வந்த தகவலையடுத்து காஷ்மீர் போலீசார், மத்திய ரிசர்வ் படையினர் உள்ளிட்ட பாதுகாப்புப் படையினர் குறிப்பிட்ட இடத்திற்கு விரைந்துள்ளனர். பாதுகாப்புப் படையினரைக் கண்ட தீவிரவாதிகள் துப்பாக்கி சூடு நடத்தினர்.

பதிலுக்கு பாதுகாப்புப் படையினரும் தாக்குதல் நடத்தினர். இந்தச் சண்டையில் 2 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். அவர்களில் ஒருவன் லஷ்கர் இ தொய்பா அமைப்பின் முக்கியத் தளபதி இஷ்பக் தர் என்ற அபு அக்ரம் என்பது தெரியவந்தது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments