குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தை இன்று சந்திக்கிறார் முதலமைச்சர் ஸ்டாலின்

0 1830
டெல்லி சென்றுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தை சந்திக்கிறார்.

டெல்லி சென்றுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தை சந்திக்கிறார்.

முதலமைச்சராகப் பொறுப்பேற்ற பின், குடியரசுத் தலைவரை சந்திக்க அவர் திட்டமிட்டிருந்தாலும், கொரோனா பரவலால் அது நடைபெறவில்லை. இந்த நிலையில் குடியரசுத் தலைவரை இன்று சந்திக்க முதலமைச்சருக்கு நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.

நேற்று மாலை சென்னையில் இருந்து புறப்பட்டு டெல்லி சென்ற முதலமைச்சருக்கு விமான நிலையத்தில் வரவேற்பு அளிக்கப்பட்டது.

குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தை இன்று சந்திக்கும்போது, எழுவர் விடுதலை, நீட் தேர்வு, மேகதாதுவில் அணை கட்டுவதை தடுத்தல் உள்ளிட்ட விவகாரங்கள் தொடர்பாக முதலமைச்சர் ஸ்டாலின் வலியுறுத்துவார் என கூறப்படுகிறது. முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதியின் உருவப்படம் சட்டப்பேரவையில் திறக்கப்பட உள்ளதாகவும், அதற்கு வருமாறு குடியரசு தலைவரிடம் ஸ்டாலின் அழைப்பு விடுப்பார் என்றும் கூறப்படுகிறது.

குடியரசுத் தலைவருடனான சந்திப்பு முடிந்த பின், இன்று இரவே முதலமைச்சர் ஸ்டாலின் சென்னை திரும்புகிறார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments