பஞ்சாப் மாநில காங்கிரஸ் தலைவராக முன்னாள் கிரிக்கெட் வீரர் சித்து நியமனம்

0 1898
பஞ்சாப் மாநில காங்கிரஸ் தலைவராக முன்னாள் கிரிக்கெட் வீரர் நவ்ஜோத் சித்து நியமிக்கப்பட்டுள்ளார்.

பஞ்சாப் மாநில காங்கிரஸ் தலைவராக முன்னாள் கிரிக்கெட் வீரர் நவ்ஜோத் சித்து நியமிக்கப்பட்டுள்ளார்.

அடுத்தாண்டு அம்மாநிலத்தில் நடைபெற உள்ள சட்டப்பேரவைத் தேர்தலை சந்திக்க காங்கிரஸ் கட்சி தயாராகி வருகிறது. இந்நிலையில், சித்து நியமனம் செய்யப்பட்டதற்கு மகிழ்ச்சி தெரிவித்து அவரின் ஆதரவாளர்கள் மேளதாளம் இசைத்தும், இனிப்பு வழங்கியும் கொண்டாடினர்.

பாட்டியாலாவில் உள்ள குருதுவாராவிற்கு சென்று வழிபட்ட சித்து, வீடு திரும்பியபோது ஆதரவாளர்கள் உற்சாக முழக்கமிட்டனர்.

சட்டமன்றத் தேர்தலுக்கான வேட்பாளர் தேர்வு உள்பட பல்வேறு முக்கிய முடிவுகளை எடுக்க சித்துவுக்கு அதிகாரம் வழங்கப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனிடையே, மாநில அரசை சித்து ஏற்கனவே கடுமையாக விமர்சித்து வந்ததால், அம்ரிந்தர் சிங்கின் ஆதரவாளர்கள் அதிருப்திக்கு ஆளாகியுள்ளனர்.

கட்சியை வலிமையுடன் வளர்த்த அமரிந்தர் சிங்கின் கடுமையான உழைப்பை சுட்டிக் காட்டி காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கு 10 எம்.எல்.ஏ.க்கள் கடிதம் எழுதியுள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments