தமிழகத்தில் 31ந் தேதி வரையிலான தளர்வுடன் கூடிய ஊரடங்கு இன்று அமலுக்கு வந்தது

0 3595

தமிழ்நாட்டில் தளர்வுகளுடன் கூடிய 31ந் தேதி வரையிலான ஊரடங்கு இன்று அமலுக்கு வந்தது. ஏற்கனவே அனுமதிக்கப்பட்ட செயல்பாடுகள் தொடரும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார்.

ஐடிஐகள், தட்டச்சு - சுருக்கெழுத்து நிறுவனங்களைத் திறக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.மாணவர் சேர்க்கை, புத்தக விநியோகம் உள்ளிட்ட பணிக்காக ஆசிரியர்கள் பள்ளிக்கு வர அனுமதிக்கப்பட்டுள்ளது.

ஆயினும் பள்ளிகள் கல்லூரிகளுக்கும் திரையரங்குகளுக்கும் தடை நீடிக்கிறது. புதுச்சேரி நீங்கலாக
மாநிலங்களுக்கிடையே தனியார் மற்றும் அரசுப் பேருந்து போக்குவரத்து, மத்திய உள்துறை அமைச்சகத்தால் அனுமதிக்கப்பட்ட வழித்தடங்களைத் தவிர, சர்வதேச விமான போக்குவரத்து ஆகியவற்றுக்கான தடை ஜூலை 31ஆம் தேதிவரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments