தமிழ்நாட்டில் மேலும் 2079 பேருக்கு கொரோனா ; 2,743 பேர் டிஸ்சார்ஜ்

0 3148
தமிழ்நாட்டில் மேலும் 2079 பேருக்கு கொரோனா ; 2,743 பேர் டிஸ்சார்ஜ்

தமிழ்நாட்டில், தினசரி கொரோனா பாதிப்பு 2 ஆயிரம் என்ற அளவை தொடும் வகையில் வேகமாக சரிந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 2 ஆயிரத்து 79 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது.

கோயம்புத்தூர் மாவட்டத்தில் ஒருநாள் கொரோனா பாதிப்பு 220ஆக சரிந்தது. ஆனால், சென்னையில் வைரஸ் தொற்று பாதிப்பு சற்று உயர்ந்து 150 ஆக பதிவாகி இருந்தது. பெரம்பலூரில் ஒற்றை இலக்கத்திற்கு, கொரோனா பாதிப்பு சரிந்து விட்டது .

ஒரே நாளில் 2 ஆயிரத்து 743 பேர் கொரோனாவில் இருந்து குணமாகி வீடு திரும்பி உள்ளனர். 21 வயது சென்னை இளைஞர், 92 வயது வேலூர் முதியவர் உள்பட 29 பேர் உயிரிழந்தனர். தமிழ்நாட்டில் 27 ஆயிரத்து 897 பேர், கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருவதாக மக்கள் நல் வாழ்வுத்துறை தெரிவித்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments