கர்நாடகாவில் ஜூலை 26 முதல் கல்லூரிகள் திறப்பு ; முதலமைச்சர் எடியூரப்பா தலைமையில் நடந்த கூட்டத்தில் முடிவு

0 3950
கர்நாடகாவில் ஜூலை 26 முதல் கல்லூரிகள் திறப்பு

வரும் 26 ஆம் தேதி முதல் இளங்கலை மற்றும் முதுகலை வகுப்புகளுக்காக கல்லூரிகள் திறக்கப்படும் என கர்நாடக அரசு அறிவித்துள்ளது. முதலமைச்சர் எடியூரப்பா தலைமையில் அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் நடத்திய ஆலோசனை கூட்டத்தில் ஊரடங்கு தொடர்பான புதிய தளர்வுகள் குறித்த முடிவுகள் எடுக்கப்பட்டன.

அதன்படி 26 ஆம் தேதி கல்லூரிகளை திறந்தாலும், குறைந்தது தடுப்பூசியின் ஒரு டோஸ் போட்டுக் கொண்டவர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படும். கொரோனா கட்டுப்பாட்டு விதிமுறைகளை பின்பற்றி நாளை முதல் 50 சதவிகித பார்வையாளர்களுடன் திரையரங்குகளை திறக்கவும் அனுமதி வழங்கப்படுவதாக அரசு அறிவித்துள்ளது. இரவு நேர ஊரடங்கும் ஒரு மணி நேரம் குறைக்கப்பட்டுள்ளது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments