சேலத்தில் ஒரே காவல் நிலையத்தில் 3 ஆண்டுகளுக்கு மேல் பணிபுரிந்த காவலர்கள் இடமாற்றம்

0 2071
சேலத்தில் ஒரே காவல் நிலையத்தில் 3 ஆண்டுகளுக்கு மேல் பணிபுரிந்த காவலர்கள் இடமாற்றம்

சேலத்தில் ஒரே காவல் நிலையத்தில் 3 ஆண்டுகளுக்கு மேல் பணிபுரிந்து வரும் காவலர்களை உடனடியாக இடமாற்றம் செய்ய மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீ அபிநவ் உத்தரவிட்டுள்ளார்.

சேலம் அஸ்தம்பட்டி அருகே உள்ள மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் காவலர்களுக்கான இடமாறுதல் சிறப்பு கூட்டம் நடைபெற்றது. இதில் பங்கேற்ற சேலம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீ அபிநவ், இந்த உத்தரவை பிறப்பித்தார்.

மேலும், காவலர்கள் முதல் காவல் உதவி ஆய்வாளர்கள் வரை பலரையும் உடனடியாக இடமாறுதல் செய்ய உத்தரவிட்டதுடன், தனித்தனியாக ஒவ்வொரு காவலர்களிடம் குறைகளை கேட்டு அவர்கள் விரும்பும் காவல் நிலையத்துக்கும், வீட்டுக்கு அருகே உள்ள காவல் நிலையத்துக்கும் இடமாறுதல் செய்ய ஆணையிட்டார்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments