ஸ்பெயின் வனப்பகுதியில் பற்றி எரியும் தீயை அணைக்க வீரர்கள் போராட்டம்

0 1897
ஸ்பெயின் வனப்பகுதியில் பற்றி எரியும் தீயை அணைக்க வீரர்கள் போராட்டம்

ஸ்பெயினின் Costa Brava வனப்பகுதியில் பற்றி எரியும் தீயை அணைக்க, விமானம் மற்றும் ஹெலிகாப்டர்கள் மூலம் தண்ணீரை பீய்ச்சி அடித்து, தீயை அணைக்கும் முயற்சியில் வீரர்கள் ஈடுபட்டுள்ளனர்.

கடந்த 16ஆம் தேதி பற்றிய தீ, தற்போது ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் கொளுந்துவிட்டு எரிகிறது. புகழ்பெற்ற Cap de Creus பூங்காவின் ஒரு பகுதியும் சேதமடைந்துள்ளது. தீயை அணைக்கும் பணியில் 6 விமானங்களும், 90 தீயணைப்பு வீரர்களும் ஈடுபட்டுள்ளனர்.

தீ காரணமாக, அந்த பகுதியில் வசித்த 350 பேர் வேறுஇடத்துக்கு மாற்றப்பட்டனர். சிகரெட் பிடித்ததால், தீப்பிடித்திருக்கலாம் என சந்தேகிப்பதால், அந்த நபர் யார் என தெரியவந்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் தெரிவித்தனர்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments