மழைக்கால கூட்டத் தொடர் - பிரதமர் மோடி தலைமையில் அனைத்துக் கட்சிக் கூட்டம்

0 2964

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் நாளை துவங்க உள்ள நிலையில், அதை சுமுகமாக நடத்துவது பற்றி பிரதமர் மோடி தலைமையில் அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெற்றது. 

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் நாளை துவங்கி அடுத்த மாதம் 13 ஆம் தேதி வரை நடக்கிறது. இந்த கூட்டத்தொடரை சுமுகமாக நடத்துவது பற்றி பிரதமர் மோடி தலைமையில் அனைத்துக் கட்சி கூட்டத்திற்கு நாடாளுமன்ற விவகார அமைச்சர் பிரகலாத் ஜோஷி அழைப்பு விடுத்தார்.

அதன்படி நாடாளுமன்ற வளாகத்தில் நடந்த கூட்டத்தில், மத்திய அமைச்சர்கள் மற்றும் பல்வேறு கட்சிகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். மழைக்கால கூட்டத்தொடரில் சுமார் 30 மசோதாக்களை தாக்கல் செய்ய அரசு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. மாநிலங்களவை கட்சித் தலைவர்களின் கூட்டத்தை அதன் தலைவர் வெங்கய்ய நாயுடு நேற்று நடத்திய நிலையில், மக்களவை கட்சித் தலைவர்களின் கூட்டத்தை அவைத் தலைவர் ஓம் பிர்லா இன்று நடத்த உள்ளார்.

கொரோனா கட்டுப்பாடு, தடுப்பூசி மேலாண்மை, பெட்ரோல்-டீசல் விலை உயர்வு உள்ளிட்டவை குறித்து எதிர்க்கட்சிகள் பலத்த குரல் எழுப்பும் என்பதால் மழைக்கால கூட்டத்தொடரில் அனல் பறக்க வாய்ப்புள்ளது. கொரோனா காரணமாக கடந்த ஆண்டின் மழைக்கால கூட்டத்தொடர் ரத்து செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments