ஸ்பெயின் வனப்பகுதியில் பற்றி எரியும் காட்டுத்தீயை கட்டுக்குள் கொண்டு வர போராடி வரும் தீயணைப்பு வீரர்கள்..!

0 1888

ஸ்பெயின் நாட்டில் கோஸ்டா பிராவா பகுதியில் பற்றியெரியும் காட்டுத்தீயை கட்டுக்குள் கொண்டு வர, தீயணைப்பு வீரர்கள் கடுமையாகப் போராடி வருகின்றனர்.

தூக்கி வீசப்பட்ட சிகரெட் துண்டால் ஏற்பட்ட காட்டுத்தீயால் Cap de Creus தேசிய பூங்காவின் ஆயிரத்திற்கும் அதிகமான ஏக்கர் நிலப்பரப்பு பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், கொளுந்துவிட்டு எரியும் தீயை கட்டுக்குள் கொண்டு வரும் பணியில் 6 விமானங்களின் உதவியுடன் 90 தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டுள்ளனர்.  

மேலும், பாதிப்புக்குள்ளான பகுதிக்கு அருகே வசித்த சுமார் 350 பேர் வெளியேற்றப்பட்டு முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments