வாஷிங்டனில் பேஸ்பால் போட்டியின் போது துப்பாக்கிச்சூட்டில் 6 வயது சிறுமி உயிரிழப்பு-3 பேருக்கு காயம்..!

0 1845

மெரிக்க தலைநகர் வாஷிங்டனில் பேஸ்பால் போட்டி நடந்து கொண்டிருக்கும் போது 4 பேர் துப்பாக்கியால் சுடப்பட்டதில் 6 வயது சிறுமி கொல்லப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

வாஷிங்டனின் தென்பகுதியில் உள்ள Nationals Park மைதானத்தில் Washington Nationals மற்றும் San Diego Padres அணிகளுக்கு இடையே பேஸ்பால் போட்டி நடந்து கொண்டிருந்தது.

மின்னொளியில், நூற்றுக்கணக்கான ரசிகர்கள் போட்டியை ரசித்து கொண்டிருந்த போது, மைதானத்திற்கு வெளியே பலமுறை துப்பாக்கியால் சுடும் சத்தம் கேட்டது. இதனால் அலறி அடித்துக் கொண்டு ரசிகர்கள் வெளியே ஓடினர். போட்டியும் பாதியில் நிறுத்தப்பட்டது.

மைதானத்தின் வெளியே சாலையில் பல போலீஸ் வாகனங்கள் சைரன்களை முழங்கியவாறு திரண்டன. நிலைமை கட்டுக்குள் இருப்பதாக தெரிவித்த போலீசார், துப்பாக்கி சூடு நடத்தியவர்கள் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments