பிரான்ஸ் - கான்ஸ் திரைப்பட விழா கோலாகலம்

0 3013

கடந்த 6ம் தேதி தொடங்கிய பிரான்ஸ் நாட்டின் கான்ஸ் திரைப்பட விழா கோலாகலமாக நிறைவு பெற்றது. சிறந்தபடம், நடிகர், நடிகை உள்ளிட்டோருக்கு விருதுகள் வழங்கப்பட்டன.

பிரெஞ்சு பெண் இயக்குனர் ஜூலியா துகோர்னாவ் இயக்கிய டைட்டானே என்ற படம் சீரியல் கொலைகாரனைப் பற்றியதாகும். இந்தப் படம் கேன்ஸ் திரைப்பட விழாவில் பெருமைக்குரிய பால்மே டி ஓர் விருதைத் தட்டிச் சென்றது. இப்படத்தை சிறந்த படமாகத் தேர்வு செய்ததை மேடையில் நடிகர் ஸ்பைக் லீ வாய்தவறி முன்கூட்டியே தெரிவித்தது சலசலப்பை ஏற்படுத்தியது.

ரஷ்யாவில் ரயில் பயணம் மேற்கொண்ட ஒரு பெண்ணின் கதையை சித்தரித்த கம்பார்ட்மெண்ட் நம்பர் 6 என்ற படம் , ஒரு கைதியின் அற உணர்வை பிரதிபலிக்கும் hero படத்துடன் கிராண்ட் ப்ரீ விருதை பகிர்ந்துக் கொண்டது.

annette படத்தின் இயக்குனர் லியோஸ் காரக்ஸ் சிறந்த இயக்குனருக்கான விருதைப் பெற்றார்.

ஜப்பான் நாவலாசிரியர் ஹூராகி முராசாகியின் கதையைத் தழுவிய "DRIVE MY CAR" படம் சிறந்த திரைக்கதைக்கான விருது பெற்றது.Renate Reinsve சிறந்த நடிகையாகவும் Caleb Landry Jones, சிறந்த நடிகராகவும் தேர்வு செய்யப்பட்டனர்.

வெற்றிப்பெற்ற படங்களின் கலைஞர்களுக்கு சிவப்புக் கம்பள வரவேற்புடன் கடந்த பத்து நாட்களாக நடைபெற்று வந்த கான்ஸ் திரைப்பட விழா நிறைவு பெற்றது

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments