இந்தியாவில் இதுவரை போடப்பட்ட கொரோனா தடுப்பூசி டோஸ்கள் எண்ணிக்கை 40 கோடியை தாண்டியது: மத்திய சுகாதார அமைச்சகம்

0 2215

நாடு முழுவதும் இதுவரை 40 கோடிக்கும் அதிகமான டோஸ் க்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

இதுகுறித்து மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் விடுத்துள்ள அறிக்கையில், நாடு முழுவதும் இதுவரை 40 கோடியே 44 லட்சத்து 67 ஆயிரத்து 526 டோஸ்களும், நேற்று ஒரே நாளில் 46 லட்சம் டோஸ் பெருந்தொற்று தடுப்பூசி போடப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளது.

தமிழ்நாட்டில் மட்டும் இதுவரை 71 லட்சத்து 42 ஆயிரத்து 613 பேர் முதல் டோஸ் தடுப்பூசியையும், 3 லட்சத்து 25 ஆயிரத்து 953 நபர்கள் இரண்டு டோஸ்களையும் இது வரை செலுத்திக் கொண்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments