மும்பையில் கனமழையால் நிலச்சரிவு - சுவர் இடிந்து 20 பேர் உயிரிழப்பு

0 2431

மும்பையில் பெய்த கனமழையை தொடர்ந்து செம்பூர் மற்றும் விக்ரோலியில் குடிசைகளும், கட்டிடங்களும் இடிந்து விழுந்ததில் 20 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.  

மும்பை செம்பூரில் குடிசை வீடுகள் இடிந்து விழுந்ததில் இடிபாடுகளில் சிக்கி 17 பேர் உயிரிழந்தனர். அந்தேரியில் மின்சாரம் பாய்ந்து ஒருவரும், பாந்தப் பகுதியில் சுவர் இடிந்து 16 வயது சிறுவனும் உயிரிழந்தனர். விக்ரோலியில் இரண்டு மாடி கட்டிடம் இடிந்து விழுந்ததில், 5 பேர் உயிரிழந்தனர்.

மேலும் பலர் இடிபாடுகளுக்குள் சிக்கி உள்ளதால் உயிரிழப்பு அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது. இந்த துயர சம்பவங்களுக்கு இரங்கல் தெரிவித்துள்ள பிரதமர் மோடி, உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு தலா 2 லட்சம் ரூபாய் நிவாரண உதவி அறிவித்துள்ளார். மகாராஷ்டிரா மாநில அரசு 5 லட்சம் ரூபாய் கருணைத் தொகை அறிவித்துள்ளது. இதனிடையே கனமழையால் மும்பையின் அனைத்து சாலைகளிலும் மழை நீர் வெள்ளம் போல் ஓடியது.

மும்பையின் பல்வேறு பகுதிகளில் நேற்று இரவு முதல் இன்று அதிகாலை வரை பெய்த கனமழையால் போக்குவரத்து பாதிக்கப்பட்டு, மக்களின் இயல்பு வாழ்க்கையும் முடங்கியது.தாழ்வான பகுதிகளில் வீடுகளுக்குள்ளேயும் மழைநீர் புகுந்ததால் மக்கள் அவதிக்கு ஆளாகினர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments