மேற்கு ஐரோப்பிய நாடுகளில் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 168ஆக உயர்வு

0 2584

மேற்கு ஐரோப்பிய நாடுகளில் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 168 ஆக உயர்ந்துள்ளது. ஜெர்மனி மற்றும் பெல்ஜியம் உள்ளிட்ட நாடுகளில் பருவநிலை மாற்றத்தால் கனமழையும் பெரு வெள்ளமும் ஏற்பட்டது.

ஜெர்மனியின் ஸ்டெயின்பர்க் என்ற அணையில் விரிசல் விழுந்துள்ளதால் அந்த அணை எந்த நிமிடத்திலும் உடையும் அபாயம் இருப்பதாகக் கூறப்படுகிறது. இதனால் அதனருகே இருந்த 4 ஆயிரத்து 500 பேர் உடனடியாக வேறிடம் கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.

3 மாதங்களில் பெய்ய வேண்டிய மொத்த மழையும் ஒரே வாரத்தில் கொட்டித் தீர்த்ததால் பெல்ஜியத்தில் லீஜ் மற்றும் வெர்வியர்ஸின் சில பகுதிகளை சுனாமி போல வந்த வெள்ளம் நீரில் மூழ்கடித்து.

இரு நாடுகளிலும் வெள்ளத்தினால் மாயமான நூற்றுக்கணக்கானவர்களை தேடும் பணியில் ராணுவத்தினர் ஈடுபட்டுள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments