முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று டெல்லி பயணம்

0 2625

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று டெல்லி செல்கிறார்.முதலமைச்சராக பொறுப்பேற்ற பிறகு பிரதமரை சந்தித்த நிலையில், குடியரசுத் தலைவரையும் மரியாதை நிமித்தமாக சந்திப்பதற்கு முதலமைச்சர் தரப்பில் நேரம் கேட்கப்பட்டது.

அதன்படி, இன்று டெல்லி செல்லும் முதலமைச்சர் ஸ்டாலின் நாளை குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்தை சந்திக்கிறார். தமிழ்நாட்டின் நலன் சார்ந்த பல்வேறு கோரிக்கைகளை முன்வைப்பார் என கூறப்படுகிறது.

பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் விடுதலை தொடர்பாக தமிழ்நாடு அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வரும் நிலையில், அதுகுறித்தும் முதலமைச்சர் குடியரசுத் தலைவரிடம் பேசுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments