டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்கும் இந்திய வீரர், வீராங்கனைகள்: வாழ்த்தி வழிஅனுப்பி வைத்த மத்திய அமைச்சர்

0 2412

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடைபெறும் ஒலிம்பிக்ஸ் போட்டியில் பங்கேற்பதற்காக புறப்பட்டுச் சென்ற இந்திய வீரர்கள், வீராங்கனைகளின் முதல் அணியை மத்திய விளையாட்டுத் துறை அமைச்சர் அனுராக் தாக்கூர், டெல்லி சர்வதேச விமான நிலையத்தில் வழியனுப்பி வைத்தார்.

விமான நிலையத்தில் திரண்டிருந்த பயணிகள், விமான நிலைய அதிகாரிகளின் உற்சாக கரவொலிகளுடன் இந்திய அணி டோக்கியோவுக்குப் புறப்பட்டுச் சென்றது.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் அனுராக் தாக்கூர், 135 கோடி இந்தியர்களின் வாழ்த்துகளும் இந்திய அணிக்கு இருப்பதாகக் கூறினார். ஒலிம்பிக்கில், இந்திய அணியினர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவார்கள் என்றும் அமைச்சர் நம்பிக்கை தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments