ஒடிசாவில் 10, 12ம் வகுப்புகளை ஜூலை 26 ஆம் தேதி முதல் தொடங்க முடிவு

0 2206

ஒடிசாவில் 10 மற்றும் 12ம் வகுப்புகளை வரும் 26ம் தேதி திறக்க மாநில அரசு திட்டமிட்டுள்ளது.

இதுகுறித்து அம்மாநில பள்ளிக் கல்வித்துறை முதன்மைச் செயலாளர்  விடுத்துள்ள அறிக்கையில், கொரோனா நெறிமுறைகளைப் பின்பற்றி ஜூலை 30 முதல் ஆகஸ்ட் 5ம் தேதி வரை 10ம் வகுப்புத் தேர்வுகள் நடக்கவிருப்பதாகக் குறிப்பிட்டுள்ளார்.

ஆன்லைன் வகுப்புகளில் இணையத் தொடர்பில் ஏற்பட்டுள்ள குறைபாடு காரணமாகவே 10 மற்றும் 12ம் வகுப்புகள் தொடங்கத் திட்டமிட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

இந்த முடிவு மாநிலம் முழுவதும் உள்ள அரசு மற்றும் அரசு சாரா பள்ளிகளுக்கும் பொருந்தும் என்று குறிப்பிட்டுள்ள அவர், மாணவர்கள் வகுப்புகளில் கலந்துகொள்வது கட்டாயமில்லை எனவும் தெரிவித்தார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments