மும்பையில் பெய்த கனமழை: சாலையில் தேங்கிய மழை வெள்ளத்தில் உற்சாக குளியல் போட்ட இளைஞர்கள்

0 2739

மும்பையின் பல்வேறு பகுதிகளில் நேற்று இரவும் இன்று அதிகாலையும் கன மழை கொட்டியது. மழைக்காலம் தொடங்கி விட்ட நிலையில் சாலைகளில் தேங்கிய நீரால் போக்குவரத்து பாதிக்கப்பட்டு, இயல்பு வாழ்க்கையும் முடங்கியது.

வாகனங்கள் மெதுவாக ஊர்ந்து செல்லும் நிலை உருவானது. கண்டிவிலியின் ஹனுமான் நகர் போன்ற பகுதிகளில் சாலைகளில் குளம் போர் நீர் தேங்கியுள்ளது. இதில் சில இளைஞர்கள் குதித்து விளையாடினர்.

தாழ்வான நகரின் சில பகுதிகளில் வீடுகளுக்குள்ளேயும் மழை நீர் புகுந்ததால் மக்கள் அவதிக்கு ஆளாயினர். மழை காரணமாக ரயில் தண்டவாளங்களும் மூழ்கியதால் மின்சார ரயில் சேவையும் பல பகுதிகளில் தடைபடும் நிலை ஏற்பட்டது.சியான் ரயில் நிலையத்தில் தண்டவாளங்கள் வெள்ளத்தில் மூழ்கியதில் ரயில்சேவை நிறுத்தப்பட்டது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments