உச்சநீதிமன்ற வழக்கு விசாரணைகள் விரைவில் நேரலையாக ஒளிபரப்பாகும்: தலைமை நீதிபதி என்.வி.ரமணா

0 2430

உச்சநீதிமன்றத்தில் நடைபெறும் வழக்கு விசாரணைகள் விரைவில் நேரலையாக ஒளிபரப்ப ஏற்பாடு செய்யப்படும் என்று தலைமை நீதிபதி என்.வி.ரமணா தெரிவித்துள்ளார்.

டெல்லியில் நடைபெற்ற இந்தியா-சிங்கப்பூர் நடுவர் மாநாட்டில் பேசிய தலைமை நீதிபதி என்.வி.ரமணா, காரியங்கள் தவறாகிப் போகும் போது மக்களுக்கு நீதித்துறை துணை நிற்பதாகத் தெரிவித்தார். மக்கள் நீதித்துறை மீது மிகுந்த நம்பிக்கை வைத்திருப்பதாகவும் அவர் கூறினார்.

நாடு முழுதும் உள்ள நீதிமன்றங்களில் நாலரை கோடி வழக்குகள் நிலுவையில் உள்ளதாகவும் சமரசம், மத்தியஸ்தம் செய்வது போன்ற மாற்று நீதி வழிகளை பின்பற்றினால், நிலுவையில் உள்ள வழக்குகளை குறைக்க முடியும்,'' என்றும், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments