பாலியல் தொல்லை பற்றி புகார் அளிக்க அனைத்து பள்ளிகளிலும் புகார் பெட்டி ; தமிழ்நாடு அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

0 3023
பாலியல் தொல்லை பற்றி புகார் அளிக்க அனைத்து பள்ளிகளிலும் புகார் பெட்டி

பாலியல் தொல்லை குறித்து மாணவிகள் புகார் தெரிவிக்கும் வகையில், அனைத்து பள்ளிகளிலும் புகார் பெட்டி வைக்க நடவடிக்கை எடுக்குமாறு, தமிழ்நாடு அரசுக்கு, சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.

12 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் 5 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்ட சேலம் மத போதகர் ஜெயசீலன் தாக்கல் செய்த மேல் முறையீட்டு மனுவை விசாரித்த நீதிபதி பி. வேல்முருகன், குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டதாக கூறி, வழக்கை தள்ளுபடி செய்து தீர்ப்பளித்தார்.

பள்ளி மாணவிகள் தெரிவிக்கும் பாலியல் புகார்கள் குறித்து விசாரணை நடத்தி, நடவடிக்கை எடுக்க சிறப்புக் குழுவை உருவாக்குமாறு, தமிழ்நாடு அரசை, கேட்டுக் கொண்ட நீதிபதி, இக்குழுவில் யார், யார்? இடம் பெற வேண்டும் என்ற விவரங்களையும் வெளியிட்டுள்ளார்.

 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments