சென்னை பெருநகரில் இடியுடன் கனமழை..!

0 3584

சென்னையின் பல்வேறு பகுதிகளில் காற்றுடன் பலத்த மழை பெய்தது. வளிமண்டலத்தில் நிலவும் மேலடுக்கு சுழற்சியால் கடந்த சில நாட்களாக சென்னையில் மாலை வேளையில் மழை பெய்து வருகிறது.

இன்றும் கிண்டி, எழும்பூர், சைதாப்பேட்டை, கோடம்பாக்கம், மயிலாப்பூர், அம்பத்தூர் மற்றும் வட சென்னை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இடியுடன் மழை பெய்தது.

சாலைகளில் மழை நீர் தேங்கி போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதால் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்கு ஆளாகினர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments