தமிழ்நாட்டில் மேலும் 2,205 பேருக்கு கொரோனா.. 2,802 பேர் குணமாகி டிஸ்சார்ஜ்..!

0 3659

தமிழ்நாட்டில், கடந்த 24 மணி நேரத்தில் 2 ஆயிரத்து 205 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது.

கோயம்புத்தூர் மாவட்டத்தில் ஒருநாள் கொரோனா பாதிப்பு 241ஆக சரிந்தது. சென்னையில் 137 பேர் மட்டுமே கொரோனாவால் பாதிக்கப்பட்டனர்.

ஈரோடு, தஞ்சாவூர், திருப்பூர் , திருச்சிராப்பள்ளி மற்றும் செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களிலும் கொரோனா பாதிப்பு குறைந்துள்ளது. ஒரே நாளில் 2 ஆயிரத்து 802 பேர் கொரோனாவில் இருந்து குணமாகி வீடு திரும்பினர்.

கடந்த 24 மணி நேரத்தில் பெருந் தொற்றுக்கு மேலும் 43 பேர் பலி ஆகி உள்ளதாகவும், தமிழ்நாட்டில் 28 ஆயிரத்து 590 பேர், கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருவதாகவும், மக்கள் நல் வாழ்வுத்துறை தெரிவித்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments