கியூபாவில் தயாரிக்கப்பட்ட கொரானா தடுப்பூசிக்கு அவசர அனுமதி

0 3291

கியூபாவின் தயாரிப்பான Abdala என்னும் கொரானா தடுப்பூசிக்கு, அந்த நாட்டின் மருந்து ஒழுங்குமுறை ஆணையம் அவசர அனுமதி வழங்கியுள்ளது.

கரீபியன் தீவில் இந்த கொரானா தடுப்பூசி தற்போது பயன்பாட்டில் உள்ளது. இந்த தடுப்பூசி, கொரானா தொற்றுக்கு எதிராக 92 புள்ளி இரண்டு எட்டு சதவீதம் செயல்திறன் கொண்டதாக கண்டறியப்பட்டுள்ளது.

கியூபாவின் 2வது உள்நாட்டு தயாரிப்பான சோபெரானா - 2 தடுப்பூசிக்கு, அடுத்த சில வாரங்களில் அனுமதி வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது, கொரானா தொற்றுக்கு எதிராக 91 புள்ளி 2 சதவீதம் செயலாற்றுவது, இறுதிக்கட்ட பரிசோதனையில் தெரியவந்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments