கொரோனா தடுப்பூசி விநியோகம் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் ; எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி

0 2259
வெளிப்படைத்தன்மையோடு கொரானா தடுப்பூசி செலுத்த வேண்டும்

தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி விநியோகம் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என்றும், தமிழக அரசுக்கு எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து, அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், மத்திய அரசால் தமிழ்நாட்டிற்கு கடந்த 2 மாதத்தில் எத்தனை லட்சம் தடுப்பூசிகள் தரப்பட்டது? அவை எத்தனை பேருக்கு போடப்பட்டது? இன்னும் இரண்டாம் டோஸ் தடுப்பூசி எத்தனை பேருக்கு போடப்பட வேண்டும் என்பதையும், மத்திய அரசிடமிருந்து வரும் தடுப்பூசிகள் மாவட்டங்கள் தோறும் எவ்வாறு பகிர்ந்தளிக்கப்படுகிறது என்பது பற்றியும், தடுப்பூசி முகாமில் யார் யாருக்கு முன்னுரிமை வழங்கப்படுகிறது என்பது பற்றியும், வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் எனவும் எடப்பாடி பழனிசாமி கேட்டுக்கொண்டுள்ளார்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments