தமிழகத்தின் 16 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு ; சென்னை வானிலை ஆய்வு மையம்

0 4173
தமிழகத்தின் 16 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் தென் மேற்கு பருவக்காற்று காரணமாக தமிழகத்தின் 16 மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கனமழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அடுத்த 24 மணி நேரத்திற்கு நீலகிரி, கோவை, தேனி, கிருஷ்ணகிரி, சேலம், தருமபுரி உள்ளிட்ட 16 மாவட்டங்களில் கனமழையும், வட மற்றும் தென் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழையும் பெய்யக்கூடும்.

நாளைய தினம் நீலகிரி, கோவை உள்பட 11 மாவட்டங்களில் கன மழை பெய்யக்கூடும். சென்னையில் இரு நாட்களுக்கு மிதமான மழை பெய்யக்கூடும். பலத்த காற்று வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் அரபிக் கடல் பகுதிகளுக்கு 5 நாட்களுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதனிடையே, வடமேற்கு வங்கக் கடலில் வருகிற 21-ந் தேதி குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக் கூடும் எனவும் வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments