இரட்டை இலக்க தசம அடிப்படையில்12 ஆம் வகுப்பு மதிப்பெண்கள் வழங்க அரசுத் தேர்வுகள் இயக்ககம் முடிவு

0 33128
இரட்டை இலக்க தசம அடிப்படையில்12 ஆம் வகுப்பு மதிப்பெண்கள் வழங்க அரசுத் தேர்வுகள் இயக்ககம் முடிவு

12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மதிப்பெண்களை இரட்டை இலக்க தசம அடிப்படையில் வழங்க அரசுத் தேர்வுகள் இயக்ககம் முடிவு செய்துள்ளது.

கொரோனாவால் கடந்த கல்வி ஆண்டுக்கான 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டது. அதற்குப் பதிலாக,10, 11-ஆம் வகுப்பு மதிப்பெண்கள் மற்றும் 12-ஆம் வகுப்பு அகமதிப்பீட்டு, செய்முறைத் தேர்வு மதிப்பெண்கள் அடிப்படையில் பொதுத்தேர்வு மதிப்பெண்கள் கணக்கிடப்பட்டு, நாளை மறுநாள் வெளியாக உள்ளது.

தசம அடிப்படையில், உதாரணத்துக்கு இயற்பியல் பாடத்தில் ஒரு மாணவரின் மதிப்பெண்களின் கூட்டுத்தொகை 68.29 என்று வருகிறது என்றால், அந்த மாணவருக்கு 69 அல்லது 68 என்று வழங்காமல், 68.29 என்று தசம அடிப்படையில் அப்படியே வழங்கப்படும்.

ஏனென்றால் பொறியியல் உள்ளிட்ட உயர்கல்வி மாணவர் சேர்க்கை கட் - ஆப் மதிப்பெண் அடிப்படையில் நடக்கிறது. கட் - ஆப் கணக்கீட்டின் போது எந்த ஒரு மாணவரும் பாதிக்கப்பட கூடாது என்பதற்காக இந்த நடைமுறை கொண்டு வரப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments