கொரோனாவால் குழந்தைகளுக்கான வழக்கமான தடுப்பூசிகள் தடைபடவில்லை: ஊடகங்களில் வெளியான செய்திகளுக்கு சுகாதார அமைச்சகம் மறுப்பு

0 2003
கொரோனாவால் குழந்தைகளுக்கான வழக்கமான தடுப்பூசிகள் தடைபடவில்லை: ஊடகங்களில் வெளியான செய்திகளுக்கு சுகாதார அமைச்சகம் மறுப்பு

கொரோனா பெருந்தொற்றின் காரணமாக, லட்சக்கணக்கான குழந்தைகளுக்கு வழக்கமான தடுப்பூசிகள் போடப்படவில்லை என வெளியான செய்திகளை சுகாதார அமைச்சகம் மறுத்துள்ளது.

இது குறித்து வெளியிட்ட அறிக்கையில், நடப்பு ஆண்டின் முதல் காலாண்டில் சாதனை அளவாக 99 சதவிகித குழந்தைகளுக்கு DTP3 எனப்படும் நோய் எதிர்ப்பு சக்திக்கான தடுப்பூசி போட்டப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதே போல் போலியோ சொட்டு மருந்து முகாம்கள் பாதிக்கப்படாமல் இருக்க சிறப்பு வழிகாட்டுதல் நெறிமுறைகள் உருவாக்கப்பட்டு பின்பற்றப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மிஷன் இந்திரதனுஷ் திட்டத்தின் கீழ் 250 மாவட்டங்கள் கண்டறியப்பட்டு, ஒன்பதரை லட்சம் குழந்தைகளுக்கும், 2 லட்சத்து 24 ஆயிரம் கர்ப்பிணிகளுக்கும் தடுப்பூசிகள் போடப்பட்டதாக சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments