கசாப்பு கடைக்கு ஏற்றிச் செல்லப்பட்ட ஆட்டுக்குட்டி..! பிரிய மனமின்றி பின்தொடர்ந்த செல்லப்பிரானி; வழியெல்லாம் கத்திக் கொண்டே ஓடிய நெகிழ்ச்சி சம்பவம்

0 5595

திருவாரூரில் தன்னுடன் ஒன்றாக வளர்ந்த ஆட்டுக்குட்டி, இறைச்சிக்காக லாரியில் ஏற்றி கொண்டு செல்லப்பட்ட போது பிரிய மனமின்றி, நாய் ஒன்று லாரியை பின் தொடர்ந்து துரத்திக் கொண்டே ஓடும் வீடியோ வெளியாகியுள்ளது.

நன்னிலம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இருந்து விற்பனை செய்யப்பட்ட ஆடுகள் எல்லாம் கசாப்புக் கடைக்கு கொண்டு செல்ல லாரியில் ஏற்றப்பட்டது. அப்போது, ஒரே வீட்டில் தன்னுடன் ஓடி, ஆடி ஒன்றாக வளர்ந்த ஆட்டிக்குட்டியை பிரிய மனமின்றி தவித்த நாய், லாரியை பின் தொடர்ந்து வழியெல்லாம் கத்திக் கொண்டே ஓடியது.

எப்படியாவது ஆட்டிக்குட்டியுடன் மீண்டும் சேர்ந்து விடுவோம் என எண்ணி நாய் ஓடிய ஓட்டம் காண்போரை நெகிழ வைத்தது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments