நடிகர் சோனு சூட்டை காண காலில் செருப்பு கூட அணியாமல் 1,200 கி.மீ தூரம் சைக்கிளில் பயணித்து வந்த ரசிகர்

0 4491
நடிகர் சோனு சூட்டை காண காலில் செருப்பு கூட அணியாமல் 1,200 கி.மீ தூரம் சைக்கிளில் பயணித்து வந்த ரசிகர்

கொரோனா காலத்தில் இடைவிடாமல் மக்களுக்கு உதவி வரும் பாலிவுட் நடிகர் சோனு சூட்டை காண, அவரது ரசிகர் ஒருவர் காலில் செருப்பு கூட அணியாமல் 1200 கிலோ மீட்டர் சைக்கிளில் பயணித்துள்ளார்.

சோனு சூட் செய்து வரும் உதவிகளுக்கு நன்றி சொல்லும் விதமாக தினந்தோறும் ஏராளமான ரசிகர்கள் மும்பையில் உள்ள அவரது வீட்டுக்கு வந்து பார்த்து செல்கின்றனர்.

இந்த நிலையில், ரசிகர் ஒருவர் காலில் செருப்பு கூட அணியாமல் 1200 கிலோ மீட்டர் சைக்கிள் பயணித்து சோனு சூட்டை காண அவரது மும்பை வீட்டுக்கு வந்துள்ளார்.

தனது சைக்கிளில் சோனு சூட்டின் புகைப்படத்தை வைத்துக் கொண்டு மலர் மாலையுடன் வந்த ரசிகரை கைகூப்பி வரவேற்ற சோனு சூட், அவருக்கு புதியதாக செருப்பு வாங்கிக் கொடுத்து வழியனுப்பி வைத்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments