உத்தர பிரதேச தேர்தல் கருத்துக்கணிப்பு: யோகி ஆதித்யநாத் மீண்டும் முதல்வராக 42.2 சதவீதம் பேர் ஆதரவு

0 4755

டுத்த ஆண்டு நடைபெற உள்ள உத்தர பிரதேச சட்டப்பேரவை தேர்தல் தொடர்பான கருத்துக்கணிப்பில் பாஜகவுக்கு 43 புள்ளி ஒரு சதவிகிதம் பேர் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

டைம்ஸ் நவ் மற்றும் சி-வோட்டர் இணைந்து நடத்திய இந்த கருத்துக்கணிப்பில் 42 புள்ளி 2 சதவிகிதம் பேர், யோகி ஆதித்யநாத் மீண்டும் முதலமைச்சர் ஆவதற்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.

சமாஜ்வாதி கட்சிக்கு வாக்களிப்போம் என 29 புள்ளி 6 சதவிகிதம் பேரும், பகுஜன் சமாஜ்வாதி கட்சிக்கு 10 புள்ளி ஒரு சதவிகிதம் பேரும்,காங்கிரசுக்கு 8 புள்ளி ஒரு சதவிகிதம் பேரும் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் முதலமைச்சராக வர 32 புள்ளி 2சதவிகிதம் பேரும், மாயாவதி முதலமைச்சராகலாம் என 17 சதவிகிதம் பேரும் கருத்து தெரிவித்துள்ளனர். காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்திக்கு 2 புள்ளி 9 சதவிகிதம் பேர் மட்டுமே ஆதரவு தெரிவித்துள்ளனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments