வங்கிக் கடன் மோசடி வழக்கு: விஜய் மல்லையா பங்குகளை விற்றதால் எஸ்பிஐக்கு ரூ.792 கோடி வருவாய்

0 2572

ங்கிக் கடன் மோசடி வழக்கு தொடர்பாக தொழிலதிபர் விஜய் மல்லையாவுக்கு சொந்தமான பங்குகளை விற்றதன் மூலம் பாரத ஸ்டேட் வங்கி தலைமையிலான கூட்டமைப்புக்கு 792 கோடி ரூபாய் கிடைத்துள்ளது.

இதேபோல் நீரவ் மோடி மீதான வழக்கு தொடர்பாக ஆயிரத்து 60 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்களை அமலாக்கத்துறை வங்கியில் ஒப்படைத்துள்ளது.

இதைத் தவிர்த்து நீரவ் மோடியின் சகோதரி பூர்வி மோடி வெளிநாட்டு வங்கியிலிருந்து அமலாக்கத்துறையின் வங்கிக் கணக்கிற்கு 17 கோடி ரூபாயை அனுப்பியுள்ளார்.

விஜய் மல்லையா, நீரவ் மோடி மற்றும் மெகுல் சோக்சி ஆகியோரால் வங்கிகளுக்கு 22 ஆயிரத்து 585 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும், அதில் 12 ஆயிரத்து 800 கோடி ரூபாய் அளவிற்கு சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments