பெரு வெள்ளத்தில் சிக்கிய கார்..! மேற்கூரையை உடைத்து குழந்தை, தந்தையை பத்திரமாக மீட்ட தீயணைப்புப் படையினர்

0 2845

மெரிக்காவில் வெள்ளத்தில் சிக்கிய காரில் தத்தளித்த இரு குழந்தைகள் மற்றும் அவர்களின் தந்தை பத்திரமாக மீட்கப்பட்டனர்.

அரிசோனா மாகாணத்தின் தென்மேற்குப் பகுதியில் உள்ள கேட்டலினா என்ற இடத்தில் புயல் தாக்கியதால் கனமழையும் பெரு வெள்ளமும் ஏற்பட்டது.

இந்நிலையில் ஆற்றினைக் கடக்க முயன்ற கார் ஒன்று வெள்ளத்தில் சிக்கி கொள்ள, அதில் பயணித்துக் கொண்டிருந்த இரு குழந்தைகளுடன், அவர்களின் தந்தை காரின் மேற்பகுதியில் உள்ள கண்ணாடியை உடைத்து மேற் கூரையில் அமர்ந்து கொண்டார்.

தகவலறிந்த தீயணைப்புப் படையினர் நீண்ட கயிற்றினைக் கட்டி முதலில் குழந்தைகளையும், பின்னர் அவர்களின் தந்தையையும் பத்திரமாக மீட்டனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments