சித்துவை மாநிலத் தலைவராக்க முதலமைச்சர் அம்ரிந்தர் சிங் தொடர்ந்து எதிர்ப்பு..! விரும்பத்தகாத முடிவுகளைத் திணிப்பதா என சோனியாவுக்கு கடிதம்

0 2778

ஞ்சாப் காங்கிரஸ் தலைவராக நவஜோத் சித்துவை நியமிக்க கட்சித் தலைமை எடுத்த முடிவுக்கு பஞ்சாப் முதலமைச்சர் அம்ரிந்தர் சிங் கடும் எதிர்ப்புத் தெரிவித்து சோனியா காந்திக்கு கடிதம் எழுதியுள்ளார்.

கட்சித் தலைமை தம் மீது விரும்பத்தகாத முடிவுகளைத் திணிப்பதாக அதில் அம்ரிந்தர் சிங் குறிப்பிட்டுள்ளார். அடுத்த ஆண்டு பஞ்சாபில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளநிலையில் சித்துவை மாநில காங்கிரஸ் தலைவராக நியமித்தால் தேர்தல் முடிவுகளை பாதிக்கக்கூடும் என்றும் அவர் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

சித்துவை கட்சியின் முக்கியப் பொறுப்புக்கும் அமரிந்தர் சிங்கை அரசுக்கும் என காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி எடுத்த முடிவு காங்கிரஸ் கட்சிக்குள் உட்கட்சிப் பூசலை அதிகரித்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments