நாடாளுமன்றத் தொடரை முன்னிட்டு நாளை அனைத்துக் கட்சிக் கூட்டம்..! 19 மசோதாக்களை நிறைவேற்ற மத்திய அரசு திட்டம்

0 2458

திங்கட்கிழமை நாடாளுமன்றம் கூடுவதை முன்னிட்டு நாளை காலை 11 மணிக்கு அனைத்துக் கட்சிக் கூட்டத்துக்கு மத்திய அரசு அழைப்பு விடுத்துள்ளது. இந்தக் கூட்டத்தில் பிரதமர் மோடியும் பங்கேற்க உள்ளார்.

இதனிடையே நாளை மாலை 4 மணியளவில் அனைத்துக் கட்சிகளின் மக்களவைக் குழுத் தலைவர்களின் கூட்டத்தை மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கூட்டியுள்ளார்.

வரும் 19ம் தேதி தொடங்கும் நாடாளுமன்றக் கூட்டத் தொடர் ஆகஸ்ட் 13 வரை நடைபெற உள்ளது. மொத்தம் 19 பணி நாட்களுக்கு கூட்டம் நடைபெறும் இதில் முக்கிய அலுவல்களையும் 19 மசோதாக்களையும் , நிறைவேற்ற மத்திய அரசு தீவிரம் காட்டி வருகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments