யானைகளின் இடம்பெயர்வு வழிகளை பாதுகாத்தல் அவசியம் -ஆய்வு முடிவில் தகவல்

0 2062
யானைகளின் இடம்பெயர் வழிகளை பாதுகாத்தல் அவசியம்

மனித - விலங்கு மோதலுக்கு தீர்வு காண எதிர்காலத்தில் யானைகளின் இடம்பெயர்வு வழிகளைப் பாதுகாக்க வேண்டிய அவசியம் உள்ளது என அதுதொடர்பான ஆய்வு முடிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கோவை- நிலம்பூர் யானை ரிசர்வ் பகுதிகளில், யானைகள் பயன்படுத்தும் இடம்பெயர்வு பாதைகள் மற்றும் போக்குவரத்து பாதைகளை ஆவணப்படுத்த யானை ஆய்வாளர், டாக்டர் என்.சிவகனேசனை கோயம்புத்தூர் வனக்கோட்டம் ஈடுபடுத்தியது.

அதில் நிலம்பூர்-கோவை யானை காப்பகத்திற்குள் மொத்தம் 18 யானைகள் இடம்பெயர் பாதைகள் அடையாளம் காணப்பட்டுள்ளது. இடம்பெயர் பாதைகளில் பெரும்பாலானவை நெடுஞ்சாலைகளுக்கு குறுக்கே சென்றாலும் யானைகள் பருவ காலங்களைப் பொறுத்தே இடம்பெயர்வதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments