சென்னை பெருநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் பலத்த மழை

0 3362
வளிமண்டல சுழற்சி காரணமாக சென்னை பெருநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் பலத்த மழை

வளிமண்டல சுழற்சி காரணமாக சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் பலத்த மழை பெய்தது. அண்ணாசாலை, சேப்பாக்கம், திருவல்லிக்கேணி, மயிலாப்பூர், பட்டினப்பாக்கம், தேனாம்பேட்டை, திநகர், வடபழனி, கிண்டி, வேளச்சேரி, நுங்கம்பாக்கம் ஆகிய பகுதிகளில் மாலையில் மழை கொட்டி தீர்த்தது.

இதனால் அலுவலகத்தில் இருந்து வீடுகளுக்கு சென்று கொண்டிருந்தவர்கள் அவதி அடைந்தனர். மழை காரணமாக பாரிமுனை பகுதியில் தாழ்வான சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது.

அம்பத்தூர், கொரட்டூர், ஆவடி, ஐய்யப்பந்தாங்கள் உள்ளிட்ட புறநகர் பகுதிகளில் மழை பெய்தது. காஞ்சிபுரம், திருவள்ளூர், திருத்தணி, பூந்தமல்லி உள்ளிட்ட பகுதிகளிலும் மழை பதிவானது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments