ஆப்கானிஸ்தானில் ஆப்கன் விமானப் படையினர் நடத்திய தாக்குதலில் 20 தலிபான்கள் பலி

0 1919
ஆப்கானிஸ்தானில் ஆப்கன் விமானப் படையினர் நடத்திய தாக்குதலில் 20 தலிபான்கள் பலி

ஆப்கானிஸ்தானின் படாக்சன் மாகாணத்தில் உள்ள சுகாடா மாவட்டத்தில், ஆப்கன் விமானப் படையினர் நடத்திய தாக்குதலில் தலிபான்கள் 20 பேர் கொல்லப்பட்டனர்.

ஆப்கானிஸ்தான் பாதுகாப்பு அமைச்சகத்தின் முகநூல் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பில், முக்கிய தளபதி உட்பட மேலும் 20 தலிபான்கள் படுகாயம் அடைந்ததாகவும், அவர்களது ஆயுதங்கள், வெடிப்பொருட்கள் மற்றும் வாகனங்கள் தகர்க்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தலிபான்களை ராணுவம் விரட்டியடித்து வருவதாகவும், தலிபான்கள் பிடியில் இருந்து 190 மாவட்டங்கள் மீட்கப்பட்டுள்ளதாகவும் அரசு உயரதிகாரி Nader Nadery தெரிவித்தார்.

 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments