சபரிமலை ஐயப்பன் கோவில் நடை திறப்பு ; நாளை முதல் 21 -ஆம் தேதி வரை பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதி

0 2871
சபரிமலை ஐயப்பன் கோவில் நடை திறப்பு

சபரிமலை அய்யப்பன் கோவில் நடை மாதாந்திர பூஜைகளுக்காக திறக்கப்பட்டது.நாளை முதல் வருகிற 21-ஆம் தேதி வரை 5 நாள்களுக்கு கோவிலுக்கு வர பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

தினசரி 5,000 பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள். அவர்கள் முன்கூட்டியே இணையதளத்தில் முன்பதிவு செய்திருக்க வேண்டும்.

கோயிலுக்கு வரும் பக்தர்கள் கொரோனா தடுப்பூசியின் இரண்டு டோஸ்களையும் செலுத்தியிருக்க வேண்டும் அல்லது கோவிலுக்கு வருவதற்கு 48 மணி நேரத்துக்கு முன்பாக ஆர்டிபிசிஆர் கொரோனா தொற்றுப் பரிசோதனை செய்துகொண்டு, தங்களுக்கு தொற்று பாதிப்பு இல்லை என்பதற்கான சான்றிதழுடன் வர வேண்டும் என்று தேவஸ்தானம் சார்பில் அறிவிக்கப்பட்டு உள்ளது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments