வாடிக்கையாளர் போல் நடித்து போலி நகைகளை கொடுத்து அசல் நகைகளை திருடிச் சென்ற தாய், மகள் கைது

0 2936
வாடிக்கையாளர் போல் நடித்து போலி நகைகளை கொடுத்து அசல் நகைகளை திருடிச் சென்ற தாய், மகள் கைது

சென்னையில் வாடிக்கையாளர் போல் நகைக்கடைக்குள் புகுந்து, போலி நகைகளை வைத்து அசல் நகைகளை திருடிச் சென்ற தாயும், மகளும் சிசிடிவி மூலம் சிக்கினர்.

வண்ணாரப்பேட்டையிலுள்ள ஸ்ரீபிரியா நகைக்கடைக்கு வந்த இரு பெண்களும், கடை உரிமையாளர் அசந்த நேரம் பார்த்து, தங்களிடம் இருந்த போலி நகைகளை வைத்து விட்டு அசல் நகைகளை எடுத்து பைக்குள் போட்டுக் கொண்டனர்.

கடை உரிமையாளரிடம் சிக்கிவிடக் கூடாது என எண்ணி வேக வேகமாக இருவரும் ஆட்டோவில் ஏறிச் சென்ற காட்சிகளும் சிசிடிவியில் பதிவாகியிருந்தது.விசாரணையில் இருவரும் ஆட்டோவில் கோயம்பேடு பேருந்து நிலையம் சென்றது தெரியவந்ததை அடுத்து தனிப்படை அமைத்த போலீசார், நகைகளை திருடிச் சென்றது மதுரை மாவட்டம் உசிலம்பட்டி பகுதியைச் சேர்ந்த தாய் சுமதி, மகள் பிரியதர்ஷினி என்பதை கண்டுபிடித்து கைது செய்தனர்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments