வரும் 19ந் தேதி காலை 11 மணிக்கு பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியாகும் - பள்ளிக்கல்வித்துறை

0 5704
வரும் 19ந் தேதி காலை 11 மணிக்கு பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியாகும் - பள்ளிக்கல்வித்துறை

மிழகத்தில் பிளஸ் 2 பொதுத் தேர்வு முடிவுகள் வருகிற 19 ஆம் தேதி காலை 11 மணிக்கு வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக அரசு தேர்வுகள் இயக்குநகர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், பள்ளி மாணவர்கள் தங்களது பதிவெண் மற்றும் பிறந்த தேதியினை பதிவு செய்து மதிப்பெண்களுடன் கூடிய தேர்வு முடிவுகளை http://www.tnresults.nic.in/http://tnresults.nic.in/https://www.dge2.tn.nic.in/https://www.dge.tn.gov.in/  இணையதளங்கள் வாயிலாக அறிந்து கொள்ளலாம் என தெரிவித்துள்ளார்.

http://www.dge.tn.gov.in/, http://www.dge.tn.gov.in/ இணையதளங்கள் மூலம் மதிப்பெண் பட்டியலை மாணவர்கள் டவுன்லோட் செய்து கொள்ளலாம்

மாணவர்கள் பள்ளிகளில் சமர்பித்த உறுதிமொழி படிவத்தில் குறிப்பிட்டுள்ள கைபேசி எண்ணுக்கு குறுஞ்செய்தியாகவும் தேர்வு முடிவுகள் அனுப்பி வைக்கப்படும்.

மேலும் பள்ளி மாணவர்கள் வருகிற 22 ஆம் தேதி காலை 11 மணி முதல், தங்களது பதிவெண் மற்றும் பிறந்த தேதியினை இணைதளங்களில் பதிவு செய்து தங்களுக்கான மதிப்பெண் பட்டியலை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்று அறிவித்துள்ளார். 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments