ஜெர்மனியில் வரலாறு காணாத வெள்ளம்... இதுவரை 81 பேர் பலி, 1300 பேர் மாயம்

0 2278

ஜெர்மனியின் மேற்கு பிராந்தியத்தில் எற்பட்ட பெருவெள்ளத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை 81 ஆக உயர்ந்துள்ளது. கொலோன் நகருக்கு தெற்கே உள்ள Ahrweiler மாவட்டத்தில், வெள்ளத்தில் சிக்கிய சுமார் 1300 பேரை காணவில்லை என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

ரைன் நதிக்கு வடக்கே உள்ள மாநிலங்களான வெஸ்ட்பாலியா மற்றும் ரைன்லாண்ட் பாலாடினேட்-ல் நகரங்களையும், கிராமங்களையும் வெள்ள நீர் சூழ்ந்துள்ளது. சாலைகள் துண்டாடப்பட்டு போக்குவரத்து முடங்கி உள்ளது.

கலோனுக்கு அருகில் உள்ள Erftstadt நகரில் இன்று காலை வெள்ளத்தில் சிக்கிய வீடுகள் உடைந்தன. பெல்ஜியம் எல்லைக்கு அருகே உள்ள Rurtalsperre அணை நிரம்பி வழிகிறது, மற்றொர் அணை உடையும் நிலையில் உள்ளதால் வெள்ள அபாயம் பல மடங்கு அதிகரித்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments