தமிழகத்தின் சில மாவட்டங்களில் 3 நாட்களுக்கு கனமழை பெய்யக்கூடும்

0 2161

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் தென்மேற்கு பருவக்காற்று காரணமாக தமிழகத்தின் சில மாவட்டங்களில் 3 நாட்களுக்கு கனமழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது குறித்த செய்திக்குறிப்பில், அடுத்த 24 மணி நேரத்திற்கு நீலகிரி, கோவை, தேனி, சேலம், தருமபுரி, நாமக்கல் ஆகிய 6 மாவட்டங்களில் கனமழையும், மேற்கு தொடர்ச்சி மலை மற்றும் உள் மாவட்டங்கள், கடலோர மாவட்டங்களில் மிதமான மழையும் பெய்யக்கூடும்.

நாளைய தினமும் நீலகிரி,கோவை, தருமபுரி, சேலம், நாமக்கல், அரியலூர், பெரம்பலூர் மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும். சென்னையில் இரு நாட்களுக்கு மிதமான மழை பெய்யக்கூடும். பலத்த காற்று வீசக்கூடும் என்பதால் வங்கக் கடல் பகுதிகளுக்கு 3 நாட்களுக்கும், அரபிக் கடல் பகுதிகளுக்கு 5 நாட்களுக்கும் மீனவர்கள் செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments